மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடங்கியது
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை முதல்கட்ட கலந்தாய்வு தொடங்கியது.;
காரைக்கால்
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை முதல்கட்ட கலந்தாய்வு தொடங்கியது.
முதல்கட்ட கலந்தாய்வு
காரைக்கால் மாவட்டத்தில் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அவ்வையார் அரசு மகளிர் கல்லூரி உள்ளன. இந்த கல்லூரிகளில் இளநிலை பட்ட படிப்புகளான பி.ஏ., பி.காம், பி.எஸ்சி., ஆகிய பாடப்பிரிவுகளில் சேருவதற்கான மாணவர் சேர்க்கை முதல்கட்ட கலந்தாய்வு இன்று தொடங்கியது.
காரைக்கால் நேருநகரில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள தேர்வுக்கூடத்தில் வருகிற 27-ந் தேதி வரை கலந்தாய்வு நடக்கிறது. கலந்தாய்வுக்கு தினமும் 150 மாணவ, மாணவிகள் வீதம் முதல்கட்ட கலந்தாய்விற்கு 859 பேர் அழைக்கப்பட்டு உள்ளனர்.
சேர்க்கை ஆணை
கலந்தாய்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்லூரியில் சேர்வதற்கான ஆணையை அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முகமது ஆசாத் ராசா, அவ்வையார் அரசு மகளிர் கல்லூரி முதல்வர் பாலாஜி ஆகியோர் வழங்கினார்கள்.