சாலையின் நடுவே வைக்கப்படும் பேனர்களால் விபத்து

காரைக்காலில் சாலையின் நடுவே வைக்கப்படும் பேனர்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.;

Update:2023-06-27 21:39 IST

காரைக்கால்

புதுச்சேரி மாநிலம் முழுவதும் விளம்பர பேனர்கள் வைப்பதற்கு தடை உள்ளது. அதையும் மீறி பல அரசியல் கட்சி பிரமுகர்கள் விளம்பர பேனர்களை வைத்து வருகின்றனர். இதில் காரைக்கால் மாவட்டமும் விதி விலக்கு இல்லை. திருமணம், பிறந்தநாள், கட்சி நிகழ்ச்சிகள் என எதுக்கு எடுத்தாலும் பேனர்கள் வைக்கப்படுகிறது.

குறிப்பாக சாலையின் நடுவே தடுப்பு சுவரின் நடுவே பேனர்கள் வைக்கப்படுகின்றன. தடுப்புச்சுவர் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. சாலையை ஆக்கிரமித்து வைக்கப்படும் பேனர்களால் உயிர் பலி ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே சாலையோரம் மற்றும் சாலை தடுப்பு சுவரில் பேனர் வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்