மனைவியை தாக்கிய தொழிலாளி

விவாகரத்து கேட்ட மனைவியை தாக்கிய தொழிலாளி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2022-09-20 17:30 GMT

பாகூர்

பாகூர் அடுத்த அரங்கனூர் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராசப்பன். தொழிலாளி. அவரது மனைவி கனிமொழி. குடும்ப பிரச்சினை தொடர்பாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இதுதொடர்பாக விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்தநிலையில் நேற்று கனிமொழி அரங்கனூர் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுவதற்காக ஸ்கூட்டரில் சென்றார். அப்போது அங்கு வந்த ராசப்பன், கனிமொழியிடம் தகராறு செய்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் பாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்