புழுதி பறக்கும் சாலையாக மாறிய மரப்பாலம்

ஜல்லி கொட்டி அப்படியே விடப்பட்டதால், புழுதி பறக்கும் சாலையாக மரப்பாலம் சந்திப்பு பகுதி மாறியது. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகிறார்கள்.

Update: 2023-10-21 13:40 GMT

புதுச்சேரி

புதுவை மரப்பாலம் சந்திப்பில் இருந்த கழிவுநீர் வாய்க்கால் தரைப்பாலம் சமீபத்தில் புதியதாக அமைக்கப்பட்டது. இந்த பணிகள் முடிந்து ஒரு மாதமாகி விட்டது.

பாலத்தின் இருபுறமும் கட்டுமான பணிக்காக பள்ளங்கள் தோண்டப்பட்டு அதில் தற்போது கான்கிரீட் கலவைகள் கொட்டப்பட்டு சமன் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதன் மேல் ஜல்லிகள் கொட்டப்பட்டு அப்படியே விடப்பட்டு உள்ளது. அங்கு முழுமையாக தார் சாலை இன்னும் அமைக்கப்படவில்லை.

புழுதி பறக்கிறது

இதனால் இந்த பாலபகுதியில் கான்கிரீட் கலவை கொட்டப்பட்ட இடத்திலிருந்து கனரக வாகனங்கள், பஸ் உள்ளிட்ட வாகனங்கள் வேகமாக செல்லும்போது புழுதி பறக்கிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

மேலும் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு மழை பெய்யும்போது அதில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக காணப்படுகிறது. தற்போது மழைக்காலம் ஆரம்பிக்க உள்ளதால் சாலை மேலும் சேதமடையும் வாய்ப்பு உள்ளது.

எனவே சிரமங்களை தவிர்க்க விரைவில் அங்கு தார்சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்