'நீட்' தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர்

'நீட்' தேர்வில் புதுவை மாநில அளவில் மாணவர் குருதேவநாதன் 675 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார்.

Update: 2022-09-08 16:46 GMT

புதுச்சேரி

'நீட்' தேர்வில் புதுவை மாநில அளவில் மாணவர் குருதேவநாதன் 675 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார்.

நீட் தேர்வு முடிவுகள்

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர தேசிய தேர்வு முகமை நடத்தும் 'நீட்' தேர்வில் வெற்றிபெற வேண்டும். இந்த கல்வியாண்டில் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு கடந்த ஜூலை மாதம் 17-ந்தேதி நடந்தது.

புதுவையில் இந்த தேர்வினை எழுத 5 ஆயிரத்து 749 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அதில் 5 ஆயிரத்து 511 பேர் தேர்வு எழுதினார்கள். தேர்வு முடிவுகள் நேற்று நள்ளிரவில் வெளியிடப்பட்டது.

குருதேவநாதன் முதலிடம்

அவர்களில் 2 ஆயிரத்து 899 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது 52.60 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இருந்தபோதிலும் கடந்த ஆண்டைவிட 0.19 சதவீதம் தேர்ச்சி குறைந்துள்ளது.

இந்த தேர்வில் மாணவர் குருதேவநாதன் 720-க்கு 675 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதல் இடத்தை பிடித்துள்ளார். அகில இந்திய அளவில் இவர் 1,249-வது இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்