காகித பயன்பாடு இல்லாத சட்டமன்றம்

புதுவையில் காகித பயன்பாடு இல்லாத சட்டமன்றம் குறித்து ஆலோசனை கூட்டம் சபாநாயகர் செல்வம் தலைமையில் நடந்தது.;

Update:2023-06-27 21:06 IST

புதுச்சேரி

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள சட்டசபைகளில் காகித பயன்பாடு குறைக்கப்பட்டுள்ளது. அங்கெல்லாம் சட்டமன்ற நடவடிக்கைகள் கணினி மயமாக்கப்பட்டுள்ளன.

இதேபோல் புதுவை சட்டமன்றத்திலும் காகித பயன்பாடு இல்லாமல் கணினி மயமாக்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் சபாநாயகர் செல்வம் தலைமையில் அவரது அலுவலகத்தில் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் அங்காளன், கே.எஸ்.பி.ரமேஷ், ரிச்சர்ட், செந்தில்குமார், அரசு செயலாளர்கள் மணிகண்டன், நெடுஞ்செழியன், சட்டசபை செயலாளர் தயாளன், தேசிய தகவல் மையத்தின் மாநில தகவல் அதிகாரி கோபி சாமிநாதன், தகவல் தொழில்நுட்பத்துறை இயக்குனர் மோகன்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அவர்களிடம் புதுவை சட்டமன்ற அலுவல்களை கணினி மயமாக்குவது தொடர்பாக விரைவாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சபாநாயகர் செல்வம் கேட்டுக்கொண்டார். வருகிற சட்டமன்ற கூட்டத்துக்கு முன்பாக இந்த பணிகளை முடிக்கவேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்