துப்புரவு தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

பாகூர் அருகே குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் துப்புரவு தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.;

Update:2023-08-24 22:48 IST

பாகூர்

பாகூர் பேட் அம்பேத்கர் வீதியை சேர்ந்தவர் மணி (வயது 54). இவர் புதுச்சேரி நகராட்சியில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அவரது மனைவி கீதா. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

இந்தநிலையில் மணிக்கு குடிப்பழக்கம் இருந்ததால் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வநதார். இதனை கீதா கண்டித்துள்ளார். இதனால் கோபித்து கொண்டு சென்ற மணி வீட்டின் பின்புறத்தில் உள்ள கொட்டகையில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்