பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு
மூலக்குளம் அருேக பெண்ணை தாக்கியவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மூலக்குளம்
மேட்டுப்பாளையம் அடுத்த முத்திரையர் பாளையம் செந்தில் நகர் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி குணாவதி. கட்டிடத் தொழிலாளி. இவர் புதிதாக கட்டி வரும் வீட்டில் மணல் கொட்டி நிரப்பி இருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ராஜாமணி என்பவரின் தாயார் புஷ்பா, அவரது வீட்டு பாத்திரங்களை எடுத்து வந்து குணா வதியின் வீட்டில் வைத்தார். இதனை அடுத்து குணாவதி தட்டிக் கேட்டபோது புஷ்பாவின் மகன் ராஜாமணி தகாத வார்த்தைகளால் திட்டி குணாவதியை கையால் தாக்கினார். புகாரின்பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் ராஜாமணிமீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.