பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது

புதுவை கோலத்தார்தோப்பு பகுதியில் பணம் வைத்து சூதாடிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-05-02 16:39 GMT

புதுச்சேரி

புதுவை கோலத்தார்தோப்பு பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக ஒதியஞ்சாலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்று சூதாடிக் கொண்டிருந்த கும்பலை சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள், பெரியார் நகரை சேர்ந்த சாலமன் (வயது 34), கோலத்தார்தோப்பை சேர்ந்த பொக்கைராஜா (33), எல்லையம்மன்கோவில் தோப்பை சேர்ந்த சுதாகர் (36), கணேஷ் (38), ஸ்ரீதர் (30), சூசைராஜ் (35) என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.5 ஆயிரத்து 690 மற்றும் சீட்டு கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்