கஞ்சா விற்ற 5 பேர் கைது

புதுச்சோியில் கஞ்சா விற்ற 5 வாலிபரை போலீசாா் அதிரடியாக கைது ெசய்தனா்.;

Update:2022-11-30 22:07 IST

புதுச்சேரி

புதுவை 45 அடி ரோட்டில் கஞ்சா விற்பனை நடப்பதாக கோரிமேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு நின்றிருந்த வாலிபர் ஒருவர் நழுவி செல்ல முயன்றார்.அவரை போலீசார் மடக்கி பிடித்து சோதித்து பார்த்தனர். அப்போது அவர் 20 பாக்கெட்டுகளில் 200 கிராம் கஞ்சாவை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அவர், காராமணிக்குப்பம் நல்லாண்டு மேஸ்திரி வீதியை சேர்ந்த ஹரிநாத் (வயது 23) ஆவார். அவரை கைது செய்த போலீசார் கஞ்சாவயைும் பறிமுதல் செய்தனர்.

அவர் சென்னையிலிருந்து கஞ்சா வாங்கி வந்து விற்பனை செய்வது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சென்னை சென்ற போலீசார் அவருக்கு கஞ்சா சப்ளை செய்த வில்லிவாக்கத்தை சேர்ந்த ஆனந்த (26), சரவணன் (23), நித்திஷ்குமார் (22), விஜய் (23) ஆகியோரையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்