போலீஸ் சூப்பிரண்டுகள் 4 பேர் இடமாற்றம்
புதுவையில் போலீஸ் சூப்பிரண்டுகள் 4 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.;
புதுச்சேரி
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் சிறப்பு பணி அலுவலராக பணி செய்து வந்த நல்லாம் கிருஷ்ணராய பாபு, மோட்டார் வாகன போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதே போல் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு வீரவல்லவன், கிழக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டாகவும், போலீஸ் ஆப் போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன், சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டாகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மோட்டார் வாகன பிரிவு போலீஸ் சூப்பிரண்டு முருகையன், புதுச்சேரி பல்கலைக்கழக சிறப்பு பணி அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவை தலைமை செயலாளர் ராஜீவ் வர்மா பிறப்பித்துள்ளார்.