புகையிலை பொருட்கள் விற்ற 4 பேர் கைது
புதுவையில் பள்ளிக்கூடம் அருகே புகையிலை பொருட்கள் விற்ற 4 பேரை கைது செய்தனர்.;
புதுச்சேரி
புதுச்சேரியில் பள்ளிக்கூடம் அருகே புகையிலை மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்யும் கடைக்காரர்களை போலீசார் கைது செய்து வருகிறார்கள். அதன்படி பள்ளிக்கூடம் அருகே புகையிலை பொருட்கள் விற்றதாக பெரியகடை பகுதியில் அப்துல் (வயது 56), காலாப்பட்டு அந்தோணி ரோபின்ஸ் ராஜா (31), ஒதியஞ்சாலை அரிகிருஷ்ணன் (54), வில்லியனூர் ஷாகுல் அமீது (50) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.