பேக்கரியை சூறையாடிய மேலும் 4 பேர் கைது
புதுச்சேரியில் மாமூல் கேட்டு பேக்கரியை சூறையாடிய வழக்கில் மேலும் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.;
மூலக்குளம்
புதுச்சேரியில் மாமூல் கேட்டு பேக்கரியை சூறையாடிய வழக்கில் மேலும் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
பேக்கரி கடை
புதுவை ரெட்டியார்பாளையத்தில் உள்ள ஒரு பேக்கரி கடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் கட்சி அலுவலகம் கட்டுவதற்காக மாமூல் கேட்டும், சிமெண்டு மூட்டைகளை வாங்கி தரவும் கேட்டதாக தெரிகிறது. இதனை வாங்கித் தர மறுத்ததால் கடை ஊழியரை தாக்கி, பொருட்களை சேதப்படுத்தி சூறையாடிச் சென்றனர்.
இதுகுறித்து கடையின் உரிமையாளர் கிஷோர் அளித்த புகாரின்பேரில் ரெட்டியார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன், பேக்கரியை சூறையாடியதாக உழவர்கரை பகுதியை சேர்ந்த ஆனந்த், சுப்ரமணி உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் ஏற்கனவே சுப்ரமணியை போலீசார் கைது செய்தனர்.
4 பேர் கைது
இதற்கிடையே பண்ருட்டியில் பதுங்கி இருந்த இந்த வழக்கில் தொடர்புடைய அருமை செல்வம் (வயது43), விக்டர் (43), ஆகியோரையும், முள்ளோடை பகுதியில் பதுங்கியிருந்த அந்தோணி (45), ஸ்டீபன் (39) ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் 4 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.