ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தாக்கப்பட்டனர்

கோவில் திருவிழாவிற்காக வேலியில் இருந்த மரத்தை அகற்றியபோது ஏற்பட்ட தகராறில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தாக்கப்பட்டனர்.;

Update:2023-08-11 21:28 IST

திருநள்ளாறு

கோவில் திருவிழாவிற்காக வேலியில் இருந்த மரத்தை அகற்றியபோது ஏற்பட்ட தகராறில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தாக்கப்பட்டனர்.

தகராறு

காரைக்காலை அடுத்த திருநள்ளாறு பேட்டை மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம். பொக்லைன் எந்திர ஆபரேட்டர். அவரது மனைவி மங்கையர்கரசி. இந்தநிலையில் பேட்டை கிராமத்தில், மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி சாமி ஊர்வலம் செல்ல ஏதுவாக தெருக்களை சுத்தம் செய்யும் பணி நடந்தது.

அப்போது மங்கையர்கரசி வீட்டின் கொல்லைப்புறத்தில் வேலிப்பகுதியில் இருந்த மரங்களை தோப்பு தெருவை சேர்ந்த பாலு அகற்றியதாக கூறப்படுகிறது. இதை மங்கையர்கரசி கண்டித்துள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

4 பேர் மீது தாக்குதல்

இதுகுறித்து, மங்கையர்கரசி தனது கணவர் சொக்கலிங்கத்திடம் தெரிவித்தார். சொக்கலிங்கம் இதுகுறித்து கேட்டபோது தகாத வார்த்தையால் பேசி பாலு தாக்கியதாக கூறப்படுகிறது.

மேலும் தடுக்க முயன்ற மங்கையர்கரசி, மகள்கள் பிரதீபா, கவுசல்யா ஆகியோரையும் அவர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திருநள்ளாறு போலீசில் மங்கையர்கரசி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் பாலு மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்