சிறை பிடிக்கப்பட்ட காரைக்கால் மீனவர்களின் 4 படகுகள் விடுவிப்பு

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக சிறை பிடிக்கப்பட்ட காரைக்கால் மீனவர்களின் 4 விசைப்படகுகள் விடுவிக்கப்பட்டன.;

Update:2023-09-24 23:59 IST

புதுச்சேரி

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக சிறை பிடிக்கப்பட்ட காரைக்கால் மீனவர்களின் 4 விசைப்படகுகள் விடுவிக்கப்பட்டன.

எல்லை தாண்டி...

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடந்த 14-ந் தேதி 4 விசைப்படகுகளில் இரட்டை மடி வலைகளை பயன்படுத்தியும், அதிவேக என்ஜினை உபயோகித்து புதுவை மற்றும் மரக்காணம் பகுதிகளில் எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாகவும் கூறப்படுகிறது.

இது பற்றிய தகவல் அறிந்தவுடன் புதுச்சேரி மீனவர்கள் படகுகளில் கடலுக்குள் சென்று காரைக்கால் மீனவர்களின் 4 விசை படகுகளையும் சிறை பிடித்து தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர். இதனால் மீனவர்களுக்கு இடையே மோதல் ஏற்படும் சூழல் இருந்து வந்தது.

4 படகுகள் விடுவிப்பு

இதனை தொடர்ந்து புதுச்சேரி, காரைக்கால் மீனவ பஞ்சாயத்தார் இடையே பேச்சுவார்த்தை தேங்காய்திட்டு துறைமுகத்தில் நடந்தது. இதில் போலீஸ் சூப்பிரண்டு வீரவல்லவன், இன்ஸ்பெக்டர்கள் இனியன், கலைச்செல்வன், கணேஷ், மீன்வளத்துறை அதிகாரிகள், மீனவ பஞ்சாயத்தார் கலந்து கொண்டனர்.

அப்போது காரைக்கால் மீன்வர்கள் எல்லை தாண்டி வந்து புதுவை எல்லைப்பகுதியில் மீன்பிடிக்கக்கூடாது என்பன உள்பட பல்வேறு நிபந்தனை விதிக்கப்பட்டது. அதனை காரைக்கால் மீனவர்கள் ஏற்றுக்கொண்டனர். இதனை தொடர்ந்து 4 படகுகளும் விடுவிக்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்