33 உதவியாளர்கள் கண்காணிப்பாளர்களாக பதவி உயர்வு
புதுவை அரசுத்துறைகளில் பணிபுரியும் 33 உதவியாளர்கள் கண்காணிப்பாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.;
புதுச்சேரி
புதுவை அரசுத்துறைகளில் பணிபுரியும் 33 உதவியாளர்கள் கண்காணிப்பாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
பதவி உயர்வு
புதுவை அரசுத்துறைகளில் பணிபுரியும் இளநிலை, மேல்நிலை, உதவியாளர்களுக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல் காலி பணியிடங்களும் நிரப்பப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் இன்று அரசுத்துறைகளில் பணிபுரியும் 33 உதவியாளர்கள் கண்காணிப்பாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டது. அவர்களுக்கு புதிய பணியிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
அவர்கள் ஜூலை மாதம் 14-ந்தேதிக்குள் புதிய பணியிடங்களில் சேரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவுகளை நிர்வாக சீர்திருத்தத்துறை சார்பு செயலாளர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ளார்.
இடமாறுதல்
இதேபோல் அரசுத்துறைகளில் பணிபுரியும் 11 கண்காணிப்பாளர்களுக்கு இடமாறுதல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவானது சனிக்கிழமை முதல் அமலுக்கு வருகிறது. அவர்களில் பெரும்பாலானவர்க்ள ஓய்வுபெறுபவர்களின் பணியிடங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டிருந்த 2 கண்காணிப்பாளர்களின் இடமாறுதல் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.