புகையிலை பொருட்கள் விற்ற பெண் உள்பட 3 பேர் கைது

புதுவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-06-18 16:34 GMT

புதுச்சேரி

புதுச்சேரியில் பள்ளிக்கூடம் அருகே புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறி கடைகளில் புகையிலை பொருட்கள், போதை வஸ்துகள் விற்பனை செய்யப்படுகிறது. இதை தடுக்க போலீஸ் உயர்அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அதன்படி முத்தியால்பேட்டை போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றும் போலீசார் சோலைநகர் பகுதியில் பள்ளிக்கூடம் அருகில் உள்ள ஒரு டீக்கடையில் திடீர் சோதனை செய்தனர். அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், சிகரெட் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக கடையின் உரிமையாளர் லாஸ்பேட்டையை சேர்ந்த ஜோதி சம்பந்தம் (வயது 65) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக முத்தியால்பேட்டையை சேர்ந்த புகழேந்தி (58), மறைமலை அடிகள் சாலையை சேர்ந்த மீனாட்சி (45) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.10,500 மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்