பி.ஆர்.டி.சி.க்கு ரூ.3 கோடியே 46 லட்சம் மானியம்
புதுவையில் பி.ஆர்.டி.சி.க்கு ரூ.3 கோடியே 46 லட்சம் மானியம் வழங்க கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.
புதுச்சேரி
புதுவை அரசுத்துறைகளின் செலவினங்களுக்கு நிதி மற்றும் மானியம் கவர்னரின் ஒப்புதலுடன் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு கழகத்துக்கு ரூ.17 கோடியே 86 லட்சம் வழங்கவும், மாகி ஆயுர்வேதா மருத்துவக்கல்லூரிக்கு ரூ.5 கோடியே 54 லட்சம் மானியம் வழங்கவும் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார். மேலும் புதுவை அரசின் சாலை போக்குவரத்து கழகத்துக்கு (பி.ஆர்.டி.சி.) ரூ.3 கோடியே 46 லட்சம் மானியம் வழங்கவும் ஒப்புதல் அளித்துள்ளார்.
மேலும் முதியோர் ஓய்வூதியம் வழங்க ரூ.43 கோடியும், இந்திய விமான நிலைய மேம்பாட்டு ஆணையத்துக்கு ரூ.7 கோடியே 90 லட்சம் வழங்கவும், புதுவை விளையாட்டு கவுன்சிலுக்கு ரு.1 கோடியே 11 லடசம் வழங்கவும், ஜி.எஸ்.டி. முறையீட்டு ஆணையம் அமைக்கவும் ஒப்புதல் அளித்துள்ளார்.