கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது
புதுச்சேரியில் கஞ்சா விற்ற 2 வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;
புதுச்சேரி
புதுச்சேரி பாண்டி மெரினா பீச் செல்லும் வழியில் கஞ்சா விற்பனை செய்வதாக ஒதியஞ்சாலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி, சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அப்போது கலங்கரை விளக்கம் அருகே நின்று கொண்டு இருந்த 2 பேர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயற்சி செய்தனர். போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் இளைஞர்கள், சுற்றுலா பயணிகளுக்கு கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தது.
விசாரணையில் அவர்கள் சாரம் வினோபா நகரை சேர்ந்த வெங்கடேஷ் (வயது 20), கிருமாம்பாக்கம் இளங்கோ நகர் தெருவை சேர்ந்த சந்துரு (21) என்பது தெரியவந்தது. போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 200 கிராம் கஞ்சா பொட்டலம், ஒரு செல்போன், ஒரு மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.