கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது

புதுவையில் கஞ்சா விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.;

Update:2023-09-05 22:47 IST

புதுச்சேரி

புதுச்சேரி செஞ்சி சாலையில் பெரியகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ், சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த 2 பேரை மடக்கி பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள் முத்தமிழ் நகரை சேர்ந்த மோயிசன் (வயது 32), மணக்குள விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த வேலு என்ற மங்கையர்கரசன் (27) என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ 124 கிராம் கஞ்சா, 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்