கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது
மூலக்குளத்தில் கஞ்சா விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.;
மூலக்குளம்
புதுச்சேரி ரெட்டியார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையிலான போலீசார் மூலக்குளம் என்ஜினீயர்ஸ் காலனி தண்ணீர் தொட்டி அருகே கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது மூலக்குளம் ஜே.ஜே. நகரை சேர்ந்த மரிபியூத் (வயது 19) என்பவர், மாணவர்கள், இளைஞர்களுக்கு கஞ்சா விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து, 120 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
முத்தியால்பேட்டை சோலைநகர் இளைஞர் விடுதி அருகே கஞ்சா விற்பனை செய்ததாக சின்ன கோட்டக்குப்பத்தை சேர்ந்த முகமது (வயது 23) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.