மோட்டார் திருடிய 2 பேர் கைது
காரைக்கால் அருகே குடிநீர் தொட்டி அறையில் இருந்த மோட்டாரை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;
திரு-பட்டினம்
காரைக்காலை அடுத்த திரு-பட்டினம் கொம்யூன் பஞ்சாயத்து கீழவாஞ்சூர் பழைய குடிநீர் தொட்டி மோட்டார் அறையில் இருந்த நீர்மூழ்கி மோட்டார் திருட்டு போய் இருந்தது. இது குறித்து கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் இளமுருகன் அளித்த புகாரின்பேரில் திரு-பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
விசாரணையில், திரு-பட்டினம் முதலித்தெருவை சேர்ந்த குமார் (வயது 38), அவரது நண்பர் வீரராஜ் (28) ஆகியோர் மோட்டார் திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து, நீர்மூழ்கி மோட்டாரை பறிமுதல் செய்தனர்.