கஞ்சா விற்ற சிறுவன் உள்பட 2 பேர் கைது
அரியாங்குப்பத்தில் கஞ்சா விற்ற சிறுவன் உள்பட 2 பேரை போலீசாா் கைது ெசய்தனா்.;
அரியாங்குப்பம்
அரியாங்குப்பம் வீராம்பட்டினம் மெயின் ரோடு செட்டிகுளம் அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அரியாங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர்.
அப்போது அங்கு இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதற்காக நின்றுகொண்டிருந்த வில்லியனூர் அருகே பொறையூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (வயது 19) மற்றும் 17 வயது சிறுவனை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.40 ஆயிரம் மதிப்பிலான 350 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப் பட்டது.