செல்போன் திருடிய 2 பேர் கைது

புதுச்சேரி புதிய பஸ் நிலையத்தில் வெளியூர் பயணிகளிடம் செல்போன் திருடுபவர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-03-23 16:56 GMT

புதுச்சேரி

புதுச்சேரி புதிய பஸ் நிலையத்தில் வெளியூர் பயணிகளை குறிவைத்து மடிக்கணினி, செல்போன் திருட்டு தொடர்ந்து நடந்து வந்தது. இதைத்தொடர்ந்து உருளையன்பேட்டை போலீஸ் பாபுஜி தலைமையில் குற்றப்பிரிவு போலீசார் சத்தியவேலு, பிரேம்குமார், செல்லதுரை, மணிகண்டன் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் பஸ் நிலையத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்தநிலையில் பஸ்நிலையத்தில் சந்தேகத்துக்கு இடமான முறையில் சுற்றித்திரிந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள், பிள்ளைத்தோட்டம் கணேஷ்பாபு (வயது41), ஆண்டியார்பாளையம் பரத்குமார் (26) என்பதும், பஸ்நிலையத்தில் பயணிகளிடம் செல்போன் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள 9 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்