கஞ்சா விற்ற 2 பேர் கைது

முத்தியால்பேட்டை அருகே கஞ்சா விற்பனை செய்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.;

Update:2023-05-21 22:42 IST
கஞ்சா விற்ற 2 பேர் கைது

முத்தியால்பேட்டை

முத்தியால்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவபிரகாசம் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் பாம்பாம்மாள் கோவில் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், கருவடிக்குப்பம் மகாவீர் நகரை சேர்ந்த கணபதி என்ற கணேஷ் (வயது 20), அப்பாசாமி தெருவை சேர்ந்த பிரதீப் என்ற அப்பு (24) என்பதும், இளைஞர்கள், தொழிலாளர்களுக்கு கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 140 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்