ரவுடிகள் உள்பட 13 பேர் ஊருக்குள் நுழைய தடை
புதுச்சேரியில் பெருகி வரும் குற்றங்களை தடுக்கும் வகையில் ரவுடிகள் உள்பட 13 பேர் ஊருக்குள் நுழைய தடை விதிக்கக்கோரி மாவட்ட கலெக்டருக்கு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.
புதுச்சேரி
புதுச்சேரியில் பெருகி வரும் குற்றங்களை தடுக்கும் வகையில் ரவுடிகள் உள்பட 13 பேர் ஊருக்குள் நுழைய தடை விதிக்கக்கோரி மாவட்ட கலெக்டருக்கு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.
குற்றங்கள் அதிகரிப்பு
புதுச்சேரியில் சமீபகாலமாக கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்க ரவுடிகளின் வீடுகளில் சோதனை, தீவிர ரோந்து என போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதன் ஒருபகுதியாக பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நபர்களை ஊருக்குள் நுழைய தடைவிதிக்கக்கோரி மாவட்ட கலெக்டருக்கு போலீசார் பரிந்துரை செய்து வருகிறார்கள்.
ரவுடிகள்
அதன்படி கருவடிக்குப்பம் பொன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரவுடி பிரசாந்த் என்கிற மிலிட்டரி (வயது 26), லாஸ்பேட்டை லட்சுமி நகர் விரிவாக்கம் கட்டபொம்மன் தெருவை சேர்ந்த ரவுடி புஷ்பராஜ் (26) ஆகியோரை ஊருக்குள் நுழைய தடை விதிக்கக்கோரி லாஸ்பேட்டை போலீசார் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளனர்.
இதேபோல் மேட்டுப்பாளையம் போலீசார், சண்முகாபுரம் அண்ணா தெருவை சேர்ந்த விஜி என்கிற ரவுடி காக்கா விஜி (41), ரெட்டியார்பாளையம் போலீசார் பூமியான்பேட்டை பாவாணர் நகர் மணிகண்டன் (27), கோரிமேடு போலீசார், ஜீவானந்தபுரம் சோனி என்கிற அருண் (27), சண்முகாபுரம் பன்னீர்செல்வம் (20), சேதராப்பட்டு போலீசார் துத்திப்பட்டு மாரியம்மன் கோவில் தெரு பிளோமின்தாஸ் (22), பிரதாப் ராஜ் (21).
ஊருக்குள் நுழைய தடை
வில்லியனூர் போலீசார், சுல்தான்பேட் ஜமாலுதீன், ஜி.என்.பாளையம் முத்துகிருஷ்ணன் (44), திருக்காஞ்சி நித்தியானந்தம் (41), மங்கலம் போலீசார் கரிக்கலாம்பாக்கம் பாலமுருகன் நகர் மணிகண்டன் (23), கிருமாம்பாக்கம் போலீசார் வில்வநாதன் என்கிற விக்னேஷ் (24) ஆகியோரை ஊருக்குள் நுழைய தடை விதிக்கக்கோரி மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளனர்.