அதிவேகமாக இயக்கப்பட்ட 10 மணல் லாரிகள் பறிமுதல்
திருநள்ளாறில் கலெக்டர் உத்தரவை மீறி அதிவேகமாக இயக்கப்பட்ட 10-க் கும் மேற்பட்ட மணல் லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
காரைக்கால்
திருநள்ளாறில் கலெக்டர் உத்தரவை மீறி அதிவேகமாக இயக்கப்பட்ட 10-க் கும் மேற்பட்ட மணல் லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அதி வேகமாக இயக்கப்படும்...
காரைக்கால் அடுத்த திருநள்ளாறு நல்லம்பல் ஏரியில் இருந்து அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்பட்டு வருகிறது. இந்த மணல் லாரிகள் மூலம் சாலை மற்றும் ரெயில்வே விரிவாக்க பணிக்காக கொண்டு செல்லப்படுகிறது. ஆனால் இந்த மணல் லாரிகள் விதிமுறைகளை கடைபிடிக்காமல் அதிவேகமாக செல்வதால் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.
கடந்த மாதம் மணல் லாரி மோதி கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவர்கள் சென்று திரும்பும் நேரமான, காலை 8.30 மணியிலிருந்து 9.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் 5 மணி வரையும் கனரக வாகனங்களை இயக்கக்கூடாது என்று மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் உத்தரவிட்டார்.
10 லாரிகள் பறிமுதல்
அதன்படி ஒரு சில நாட்கள் மட்டுமே கலெக்டரின் உத்தரவை லாரி டிரைவர்கள் மதித்தனர். தற்போது கலெக்டரின் உத்தரவை காற்றில் பறக்க விட்டதுபோல் வழக்கம் போல் மாணவர்கள் பள்ளி கல்லூரிக்கு சென்று திரும்பும் நேரத்தில், அதிவேகமாக லாரிகள் இயங்கி வருகின்றன.
இதைத்தொடர்ந்து, திருநள்ளாறு சுரக்குடி மற்றும் மெயின் சாலைகளில், நேற்று மாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிவு செல்வம் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதிவேகமாக வந்த 10-க்கும் மேற்பட்ட லாரிகளை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.