ராபிடோவில் பயணம் செய்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை

ராபிடோவில் பயணம் செய்த இளம்பெண்ணுக்கு, வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

Update: 2024-07-30 01:00 GMT

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் நெலமங்களா டவுன் பாகலகுண்டே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் வேலைக்கு செல்வதற்கு புறப்பட்டார். அப்போது ராபிடோ பைக் டாக்சி ஒன்றை முன்பதிவு செய்தார். அதன்படி வாலிபர் ஒருவர் ராபிடோ பைக் டாக்சியில் வந்தார்.

அவர் இளம்பெண்ணை மோட்டார் சைக்கிளில் டிராப் செய்வதாக அழைத்து கொண்டு சென்றார். அப்போது சாலையில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து, இளம்பெண்ணுக்கு, வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதைக்கண்டு அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் இதனை கண்டித்துள்ளார். எனினும் வாலிபர் தொடர்ந்து அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதையடுத்து அந்த பெண் பைக் டாச்சியை நிறுத்தி உள்ளார். பின்னர் டிரைவருடன், அவர் வாக்குவாதம் செய்தார். இதையடுத்து வாலிபர் அங்கிருந்து தப்பிக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த ஒய்சாலா போலீசார் வாலிபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் பைக் டாக்சி டிரைவர் என்பதும், இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து வாலிபரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் வாலிபர் ஜெய்ப்பூரை சேர்ந்த மகேஷ் என்பது தெரிந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்