வயநாட்டில் மீண்டும் நிலச்சரிவு ஏற்படலாம் என எச்சரிக்கை

கேரளாவில் நாளை மறுநாள் முதல் படிப்படியாக மழை குறையும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.;

Update:2024-07-31 09:41 IST

வயநாடு,

கேரள மாநிலம் வயநாட்டில் நேற்று அடுத்தடுத்து ஏற்பட்ட 2 நிலச்சரிவுகளில் சிக்கி 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 1,500-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய 3 கிராமங்கள் மண்ணுக்குள் புதைந்த நிலையில், மீட்புப்பணிகள் 2-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், வயநாட்டில் மீண்டும் கனமழை பெய்தால் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பிருப்பதாக தேசிய பேரிடர் மீட்புப் படை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கேரளாவில் இன்றும் நாளையும் கனமழை தொடர வாய்ப்பு இருப்பதால் அங்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் நாளை மறுநாள் முதல் படிப்படியாக மழை குறையும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வயநாடு நிலச்சரிவில் சிக்கி காணாமல் போனவர்கள் மற்றும் மருத்துவமனையில் உள்ளவர்களின் நிலை குறித்த தகவல்களை அறிந்துக் கொள்ள 8078409770 என்ற உதவி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்