நிதித்துறை செயலராக துஹின் காந்தா பாண்டே நியமனம்
மத்திய அரசின் நிதித்துறை செயலராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி துஹின் காந்தா பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுடெல்லி,
மத்திய அமைச்சரவை செயலராக இருந்த ராஜிவ் கவுபா பணி நிறைவு பெற்றார். அப்பதவிக்கு நிதித்துறை செயலராக இருந்த டி.வி. சோமநாதன், மத்திய அமைச்சரவை செயலராக நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து காலியாக இருந்த நிதித்துறை செயலர் பதவிக்கு துஹின் காந்தா பாண்டே இன்று நியமனம் செய்யப்பட்டார். கடந்த 1987 ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். கேடரான துஹின் காந்தா பாண்டே, முதலீடு மற்றும் பொதுத்துறை செயலராக இருந்து வந்தார்.