போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் நடைமுறைப்படுத்தினால் மட்டுமே, உயிருடன் இருக்கும் அமெரிக்க-இஸ்ரேலிய பணயக் கைதி ஒருவரையும், 4 பேரின் உடல்களையும் ஒப்படைப்பதாக ஹமாஸ் கூறி உள்ளது.
தெலுங்கானா சுரங்க விபத்து.. 7 பேரை தேடும் பணி தீவிரம்
தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டம் தோமலபென்டா பகுதியருகே கடந்த பிப்ரவரி 22-ம் தேதி சுரங்கப்பாதை கட்டுமான பணி நடைபெற்றபோது சுரங்கத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் சிக்கிய 8 தொழிலாளர்களில் கடந்த 9-ம் தேதி ஒருவரின் உடல் மீட்கப்பட்ட நிலையில், மற்ற 7 பேரையும் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 24 மணி நேரமும் பணி நடைபெறுகிறது.
சுரங்கப்பாதைக்குள் குவிந்துள்ள மண் மற்றும் பிற குப்பைகளை விரைவாக அகற்றுவதற்காக, ஹைட்ராலிக் ரோபோ பயன்படுத்தப்படுகிறது. அதனுடன் 30 ஹெச்பி திறன் கொண்ட வாக்கம் பம்ப், வாக்கம் டேங்க் மெஷின் போன்ற உபகரணங்களும் பயன்படுத்தப்படுகின்றன.
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் ஏ.ஆர்.ரகுமான். நேற்று லண்டனில் இருந்து சென்னை திரும்பிய ஏ.ஆர்.ரகுமானுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையில் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 21ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சர்வதேச விண்வெளி மையத்தை சென்றடைந்தது டிராகன் விண்கலம். சுனிதா வில்லியம்ஸை விரைவில் பூமிக்கு அழைத்துவர ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
திமுக அரசின் ஊழல் வித்தைகள் செல்லாது என்று தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.
சென்னையில் இ-பைக் தீப்பிடித்து விபத்து 3 பேர் காயம் காயமடைந்தனர். சென்னை மதுரவாயலில் சார்ஜ் போட்ட போது இ-பைக் தீப்பிடித்து விபத்துக்குள்ளானது 9 மாத குழந்தை உட்பட 3 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் உடல்நிலையை கேட்டறிந்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். ஏ.ஆர்.ரகுமான் நலமாக உள்ளதாகவும், விரைவில் வீடு திரும்புவார் என்றும் டாக்டர்கள் தெரிவித்துள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
பிரபல ரவுடியும் பாஜக ஓ.பி.சி. அணி மாவட்ட தலைவருமான படப்பை குணா மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.
ஞாயிறு விடுமுறையை ஒட்டி, கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள். அதிகாலை முதல் காத்திருந்து சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர். கடல் அலைகள் ஆக்ரோஷத்துடன் காணப்படுவதால், விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை இடையிலான படகு சேவை தற்காலிக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.