உத்தர பிரதேசம்: லாரி-பைக் மோதி விபத்து - 2 பேர் பலி
உத்தர பிரதேசத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.;

லக்னோ,
உத்தர பிரதேசம் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் இரண்டு இளைஞர்கள் பைக்கில் மகாராஜ்கஞ்ச்-கோரக்பூர் சாலையில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பைக்கானது நிலைதடுமாறி அதே சாலையில் வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் கங்கேஷ் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். விபத்தில் சிக்கி படுகாயமடைந்த மித்லேஷ் யாதவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர் இந்த விபத்தில் உயிரிழந்த கங்கேஷின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் யாதவ் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.