500 ரூபாய்க்காக தம்பியை குத்தி கொன்ற அண்ணன் கைது
500 ரூபாய்க்காக ஏற்பட்ட வாக்குவாதத்தில் தம்பியை குத்தி கொன்ற அண்ணனை போலீசார் கைது செய்துள்ளனர்.;
மும்பை,
மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தின் கல்யாண் பகுதியில் வசித்து வந்தவர் சலீம் ஷமீம் கான் (32). அவரது சகோதரர் நசீம் கான் (27). நேற்று முன்தினம் 500 ரூபாய் பணத்தை நசீம் தனது பாக்கெட்டிலிருந்து எடுத்ததாக குடிபோதையில் இருந்த சலீம் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் அதிகரித்து மோதலாக மாறியது. இதையடுத்து, தம்பி என்றும் பார்க்காமல் சலீம் நசீமை கத்தியால் குத்தியுள்ளார். இதில் நசீம் சம்பவ இடத்திலேயே பறிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் பற்றி அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சலீமை கைது செய்தனர். இதனை தொடர்ந்து உயிரிழந்த நசீமின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.