மையோனஸ் உணவு பொருளுக்கு ஓராண்டு தடை: தெலுங்கானா அரசு உத்தரவு

முட்டையிலிருந்து செய்யப்படும் மையோனைஸுக்கு தெலங்கானா அரசு ஓராண்டுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

Update: 2024-10-30 19:35 GMT

ஐதரபாத்,

முட்டையின் வெள்ளை கருவுடன் எண்ணெய் சேர்த்து உருவாக்கப்படும் உணவு பொருள் மையோனஸ். பாட்டில்களிலும், பாக்கெட்டுகளிலும் அடைத்து இந்த மையோனஸ் விற்பனை செய்யப்படுகிறது. இது தற்போது சைவப் பிரியர்களுக்காக முட்டை கலக்காமலும் செய்யப்படுகிறது. பிரெஞ்சு உணவு வகையான மையோனைஸ் சாண்ட்விச், ஷவர்மா, பர்கர் உள்ளிட்ட உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. இளையதலைமுறையினர் விரும்பி சாப்பிடும் ஒரு உணவுகளின் பட்டியலில் மையனோசும் இடம் பிடித்துள்ளது.

கடந்த சில நாட்களாக தெலங்கானாவில் புட் பாய்சன் தொடர்பான புகார்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளன. பலரும் உடல் உபாதைகள் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக நடந்த ஆய்வில், இந்த உபாதைகளின் பின்னால் முட்டையிலிருந்து செய்யப்படும் மையோனைஸ் இருப்பது தெரியவந்துள்ளதாக தெலங்கானா உணவுப் பாதுகாப்பு ஆணையர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மையோனைஸ் வகைகளுக்கு ஓராண்டு காலம் தடை விதிக்கப்படுவதாக தெலுங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்