இந்திய பங்குச்சந்தை கடும் சரிவு
இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்துள்ளது.;
மும்பை,
நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதில் பா.ஜ.க. கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க. கூட்டணி 282 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 219 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்துள்ளது. பங்குச்சந்தை காலை தொடங்கியபோதே கடும் சரிவை சந்தித்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி நிப்டி 850 புள்ளிகள் சரிவுடன் 22 ஆயிரத்து 400 புள்ளிகளில் வர்த்தகம் ஆகிறது. பேங்க் நிப்டி 2 ஆயிரம் புள்ளிகள் சரிவுடன் 48 ஆயிரத்து 800 புள்ளிகளுடன் வர்த்தகம் ஆகிறது. சென்செக்ஸ் 2 ஆயிரத்து 200 புள்ளிகள் சரிவுடன் 74 ஆயிரத்து 300 புள்ளிகளுடன் வர்த்தகம் ஆகிறது.
பங்குச்சந்தை நேற்று மிகப்பெரிய ஏற்றம் கண்ட நிலையில் இன்று அதே அளவிற்கு சரிவை சந்தித்துள்ளது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை பங்குச்சந்தையில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.