ஊடுருவலை நிறுத்தினால் தான் மே.வங்கத்தில் அமைதி திரும்பும் - அமித் ஷா
வங்கதேசத்தில் இருந்து வரும் ஊடுருவலைத் தடுத்து நிறுத்தினால்தான் மேற்குவங்கத்தில் அமைதியை நிலைநாட்ட முடியும் என்று மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா கூறினார்.
கொல்கத்தா,
மேற்கு வங்கத்தில் இந்திய வங்கதேச எல்லைப் பகுதியில் பெர்டாபோலில் உள்ள சோதனைச் சாவடியில் புதிய பயணிகள் மற்றும் சரக்கு முனையத்தை உள்துறை மந்திரி அமித் ஷா திறந்து வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில், அமித்ஷா பேசியதாவது:-
வங்கதேசத்தில் இருந்து வரும் ஊடுருவலைத் தடுத்து நிறுத்தினால்தான் மேற்குவங்கத்தில் அமைதியை நிலைநாட்ட முடியும். 2026- ல் மாற்றத்தை ஏற்படுத்துமாறு நான் மேற்குவங்க மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். இரண்டு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை, இணைப்பை மேம்படுத்துவதில் சோதனைச் சாவடிகள் முக்கிய பங்காற்றுகின்றன. அவை இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக உறவுகளையும் மேம்படுத்துகின்றன" என்றார்.