செந்தில் பாலாஜி வழக்கை நேரடியாக கண்காணிப்போம் - சுப்ரீம்கோர்ட்டு

செந்தில் பாலாஜி வழக்கில் கீழமை நீதிமன்ற விசாரணையை நேரடியாக கண்காணிப்போம் என்று சுப்ரீம்கோர்ட்டு தெரிவித்துள்ளது.;

Update: 2024-09-02 09:17 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான ஊழல் வழக்குகளை ஓராண்டுக்குள் நிறைவு செய்ய உத்தரவிடக் கோரிய மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

அப்போது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்ற வழக்கு தொடர கவர்னர் ஆர்.என்.ரவி அனுமதி அளித்துள்ளார் என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதற்கு 7 மாதங்கள் கழித்து கவர்னர் அனுமதி அளித்தது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

தொடர்ந்து நடந்த வழக்கு விசாரணையின்போது, செந்தில் பாலாஜி வழக்கில் கீழமை நீதிமன்ற விசாரணையை நேரடியாக கண்காணிப்போம் என்றும், விசாரணை எவ்வாறு நடக்கிறது என அவ்வப்போது அறிக்கை பெற்று மேற்பார்வை செய்ய முடியும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.

மேலும் விசாரணை அறிக்கையை, உயர்நீதிமன்ற பதிவாளர் வாயிலாக, எம்.பி., எம்.எல்.ஏ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி சமர்ப்பிக்க சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி அளிக்கும் நிலவர அறிக்கை செப்டம்பர் 30-ம் தேதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று சுப்ரீம்கோர்ட்டு தெரிவித்துள்ளது.

இதனிடையே சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகும் வகையில், அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞரை நியமிக்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்