காஷ்மீர்: பாதுகாப்புப்படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் ஆயுதங்கள் பறிமுதல்

காஷ்மீரில் பாதுகாப்புப்படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் துப்பாக்கி, கையெறி குண்டு உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.;

Update:2025-04-06 20:36 IST
காஷ்மீர்: பாதுகாப்புப்படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் ஆயுதங்கள் பறிமுதல்

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், காஷ்மீரின் குப்வாரா மாவட்டம் கண்டி வனப்பகுதியில் பாதுகாப்புப்படையினர், போலீசாருடன் இணைந்து இன்று தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, வனப்பகுதியில் பதுங்கி வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி, 7 கையெறி குண்டுகள், 90 தோட்டாக்கள், சூரியஒளி மின்சக்தியில் இயங்கும் செல்போன் சார்ஜர்கள் (2) , பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட மருந்துகளில், தற்காலிக தங்கும் பைகள் (sleeping bag) உள்ளிட்டவற்றை பாதுகாப்புப்படையினர் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்