உ.பி.: பெட்ரோல் குறைவு என கூறிய நபரை தாக்கிய ஊழியர்கள்; வைரலான வீடியோ
பெட்ரோல் பம்ப் ஊழியர்களில் சிலர் பெரிய கட்டை மற்றும் கம்பு ஆகியவற்றை எடுத்து வந்து அலோக்கை தாக்கியுள்ளனர்.;
பிரோசாபாத்,
உத்தர பிரதேசத்தில் பிரோசாபாத் நகரில் தனா தக்சின் பகுதியில் ஸ்டேசன் சாலை என்ற இடத்தில் பெட்ரோல் பம்ப் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்புவதற்காக அலோக் என்பவர் சென்றுள்ளார்.
அப்போது, பெட்ரோல் குறைவாக போட்டுள்ளனர் என ஊழியர்களை நோக்கி அலோக் குற்றச்சாட்டாக கூறியுள்ளார். அவர்களிடம் இதுபற்றி கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் பெட்ரோல் பம்ப் ஊழியர்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர்.
அவர்களில் சிலர் பெரிய கட்டை மற்றும் கம்பு ஆகியவற்றை எடுத்து வந்து அலோக்கை தாக்கியுள்ளனர். இதனை பெட்ரோல் போட வந்தவர்களில் ஒருவர் வீடியோவாக படம் பிடித்து உள்ளார்.
அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுபற்றி தகவல் அறிந்து போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.