கட்டிலில் மனைவியுடன் பக்கத்துவீட்டுக்காரர்...ஆத்திரத்தில் தொழிலாளி செய்த செயல்

வெளியூர் சென்று இருந்த கணவர் வியாழக்கிழமை இரவே வீடு திரும்பினார்.;

Update:2025-04-14 20:46 IST
கட்டிலில் மனைவியுடன் பக்கத்துவீட்டுக்காரர்...ஆத்திரத்தில் தொழிலாளி செய்த செயல்

லக்னோ,

உத்தர பிரதேசம் மாநிலம் கான்பூர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வரும் கணவன் இவர் கூலி தொழில் செய்து வருகிறார். வேலை விஷயமாக வெளியூர் சென்று இருந்தார். வெள்ளிக்கிழமைதான் வீடு திரும்புவேன் என்று கூறிவிட்டு சென்ற அவர் வேலை சீக்கிரமாகவே முடிந்துவிட்டதால் வியாழக்கிழமை இரவே வீடு திரும்பி திரும்பினார்.

அப்போது வீட்டில் படுக்கையில் தனது மனைவியுடன் பக்கத்துவீட்டுக்காரர் உல்லாசமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அங்கிருந்து ஓட முயன்ற பக்கத்து வீட்டுக்காரரை அந்த பெண்ணின் கணவர் பிடித்து சரமாரியாக அடித்து, அதன் பின்னர் அவருடைய அந்தரங்க உறுப்பை பற்களால் கடித்துள்ளார்.

அந்த நபரின் மர்ம உறுப்பில் இருந்து ரத்தம் கொட்டிய நிலையில் பயத்தில் அங்கிருந்து தப்பித்து காவல் நிலையத்தில் அடைக்கலம் புகுந்தார். அதன் பின்னர் அந்த நபரை காவல்துறையினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு அவரது உடல்நிலை பரிசோதனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்