வல்லபாய் படேலின் ஆளுமை, பணி ஒவ்வொரு தலைமுறையை தொடர்ந்து ஊக்கமளிக்கும் - பிரதமர் மோடி

தேசத்தின் ஒற்றுமை, இறையாண்மையை முதன்மையாகக் கொண்டவர் வல்லபாய் படேல் என்று பிரதமர் மோடி கூறினார்.

Update: 2024-10-31 03:52 GMT

புதுடெல்லி,

இன்று அக்டோபர் 31ம் தேதி, இந்தியாவின் இரும்பு மனிதரும், சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை மந்திரியுமான சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்தநாள் தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதமர் மோடி குஜராத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் இன்று கலந்து கொள்கிறார்.

இந்த நிலையில், இரண்டு நாள் பயணமாக குஜராத் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அங்குள்ள ஒற்றுமை சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து கேவாடியாவில் உள்ள ஒற்றுமைப் பேரணி மைதானத்தில் நடந்த பேரணியில் பிரதமர் கலந்து கொண்டு உரையாற்றினார்.

முன்னதாக பிரதமர் மோடி எக்ஸ் தள பதிவில் பதிவிட்டுள்ளதாவது:-

பாரத ரத்னா சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளில் அவருக்கு வணக்கங்கள் தேசத்தின் ஒற்றுமை, இறையாண்மையை முதன்மையாகக் கொண்டவர் வல்லபாய் படேல்; வல்லபாய் படேலின் ஆளுமை, பணி ஒவ்வொரு தலைமுறையை தொடர்ந்து ஊக்கமளிக்கும் என பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்