நீட் வினாத்தாள் கசிவு: தேஜஸ்வி யாதவ் மீது பீகார் துணை முதல்-மந்திரி குற்றச்சாட்டு
நீட் வினாத்தாள் கசிவுக்கும் தேஜஸ்வி யாதவின் தனிப்பட்ட செயலாளருக்கும் தொடர்புள்ளாதாக பீகார் துணை முதல்-மந்திரி சின்ஹா குற்றம் சாட்டியுள்ளார்.;
பாட்னா,
நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த மாதம் 5-ந்தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வுக்கான முடிவுகள் யாரும் எதிர்பார்க்காத வகையில் கடந்த 4ம் தேதி வெளியிடப்பட்டது. அப்படி வெளியிடப்பட்ட முடிவுகளில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக ஒரே பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற 6 மாணவர்கள் முழுமையான மதிப்பெண்கள் பெற்று இருப்பதும், சில மாணவர்களுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் இல்லாமல் முழுமையான மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருப்பதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே பீகாரில் நீட் வினாத்தாள் கசிந்ததாக சமீபத்தில் தகவல் வெளியானது. இதுதொடர்பாக பொருளாதார குற்றப் பிரிவின் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. இதுகுறித்து பீகார் துணை முதல்-மந்திரி விஜய்குமார் சின்ஹா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் பீகார் அரசு விருந்தினர் இல்லத்தில் இருந்து கைது செய்யப்பட்டவர்களுக்கும் பிரீத்தம் என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதுபோல பிரீத்தம் முன்னாள் துணை முதல்-மந்திரியும், ராஷ்ட்ரிய ஜனதா தள(ஆர்ஜேடி) தலைவருமான தேஜஸ்வியின் தனிப்பட்ட செயலாளர் ஆவார். கைது செய்யப்பட்ட சிக்கந்தரும் பிரீத்தமும் நெருங்கிய உறவினர்கள் ஆவர். சிக்கந்தரின் சகோதரி ரீனா யாதவ் மற்றும் மகன் அனுராக் யாதவ் ஆகியோர் கடந்த மாதம் 4-ம் தேதி தங்குவதற்காக என்.எச்.ஏ.ஐ. விருந்தினர் மாளிகை ஒன்று முன்பதிவு செய்யப்பட்டது. சிக்கந்தரின் தொலைபேசி கோரிக்கையின் பேரில் உதவியாளர் பிரீத்தம் MULAM விருந்தினர் மாளிகை முன்பதிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பான முழு விவரத்தையும்சேகரித்து வருகிறோம். இதுகுறித்து ஆய்வு செய்து தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.