ஐஐடி கவுகாத்தி விடுதி அறையில் மாணவர் சடலமாக மீட்பு-போராட்டம் வெடித்தது

கல்லூரி விடுதியில் உள்ள அறை ஒன்றில் இருந்த பிம்லேஷ் குமார் என்ற மாணவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.;

Update: 2024-09-10 04:08 GMT

கவுகாத்தி,

அசாம் மாநிலம் கவுகாத்தியில் ஐ.ஐ.டி., கல்வி நிறுவனம் உள்ளது. நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் இங்கு படித்து வருகின்றனர். இந் நிலையில் கல்லூரி விடுதியில் உள்ள அறை ஒன்றில் இருந்த பிம்லேஷ் குமார் என்பவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். பி.டெக் 3-ம் ஆண்டு மாணவரான அவர் உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர்.

விடுதியில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக சக மாணவர்கள் குற்றம்சாட்டினர். இந்த சம்பவத்தை கண்டித்து அவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்