மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் - சஞ்சய் ராவத்
மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று சஞ்சய் ராவத் கூறினார்.;
மும்பை,
மராட்டிய சட்டசபை தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 288 தொகுதிகளில், இந்த கூட்டணி 230 இடங்களை கைப்பற்றியது. எனினும் மாநிலத்தின் முதல்-மந்திரி இன்னும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இதனால் ஆட்சியமைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து உத்தவ் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் எம்.பி. செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மகாயுதி கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் அந்த கூட்டணியால் இன்னும் ஆட்சி அமைக்க முடியவில்லை. மராட்டிய சட்டசபை பதவிக்காலம் கடந்த 26-ந்தேதியே முடிவடைந்ததால், இங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.