லாவோஸ் நாட்டிற்கு பிரதமர் மோடி பயணம்
பிரதமர் மோடி லாவோஸ் நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.;
புதுடெல்லி,
தெற்காசிய நாடுகளில் ஒன்றான லாவோஸ் நாட்டில் 21-வது ஆசியான்-இந்தியா உச்சிமாநாடு மற்றும் 19-வது கிழக்காசிய மாநாடு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடிக்கு லாவோஸ் நாட்டின் பிரதமர் சோனேக்சே சிபாண்டோன் அழைப்பு விடுத்திருந்தார்.
இந்நிலையில், இந்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி வரும் 10, 11-ம் தேதிகளில் லாவோஸ் நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து லாவோஸ் நாட்டில் நடைபெறும் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.