புரூனே புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி

அரசு முறை பயணமாக பிரதமர் மோடி புருனே நாட்டிற்கு புறப்பட்டு சென்றார்.

Update: 2024-09-03 04:42 GMT

டெல்லி,

இந்தியா - புரூனே இடையே நட்புறவு 40-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்நிலையில், இருநாட்டு இடையேயான உறவை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அரசுமுறை பயணமாக பிரதமர் மோடி இன்று புரூனே புறப்பட்டு சென்றார்.

டெல்லியில் இருந்து விமானம் மூலம் பிரதமர் மோடி புரூனே புறப்பட்டு சென்றார். புருனே செல்லும் பிரதமர் மோடி அந்நாட்டு சுல்தான் ஹசனல் போல்க்கை சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது இரு நாட்டு உறவு, வர்த்தகம், விண்வெளிதுறை, பாதுகாப்பு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்துகின்றனர்.

புரூனே பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி சிங்கப்பூர் செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்