மத்திய பட்ஜெட்: பொருளாதார வல்லுநர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு

மத்திய பட்ஜெட் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் பொருளாதார வல்லுநர்களை பிரதமர் மோடி சந்தித்தார்.

Update: 2024-12-24 10:13 GMT

டெல்லி,

2025-26ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 1ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.

பட்ஜெட் தாக்கல் செய்ய இன்னும் குறுகிய காலமே உள்ள நிலையில் பட்ஜெட் தயாரிப்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மத்திய பட்ஜெட் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் பொருளாதார வல்லுநர்கள், நிபுணர்களை பிரதமர் மோடி இன்று சந்தித்தார். இந்த சந்திப்பின்போது பட்ஜெட் தயாரிப்பு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்த சந்திப்பின்போது, நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், நிதி ஆயோக் துணைத்தளைவர் சுமன் பெரி, நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி சுப்ரமணியன் உள்பட பலர் உடன் இருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்