தமிழகத்தில் 6 புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்க அனுமதி

தென்காசி, மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகள் அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்துள்ளது.;

Update: 2024-05-24 01:24 GMT

கோப்புப்படம் 

புதுடெல்லி,

தமிழகத்தில் புதிதாக ஆறு மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி, தென்காசி, மயிலாடுதுறை, பெரம்பலூர், அரக்கோணம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 6 மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பங்களிப்போடு அமைக்கப்படும் இந்த மருத்துவ கல்லூரிகளுக்கு 25 ஏக்கர் நிலத்தை அடையாளம் காணும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதிய மருத்துவ கல்லூரிகள் அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் கடந்த மே 6-ம் தேதி நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட 9 உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்