பட்ஜெட்டில் பாரபட்சம்: மாநிலங்களவையில் அமளி - எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு

பட்ஜெட்டில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாக கூறி மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

Update: 2024-07-24 06:08 GMT

டெல்லி,

2024-25ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மத்திய பட்ஜெட்டில் பீகார், ஆந்திராவுக்கு அதிக அறிவிப்புகள் இடம்பெற்றன.

அதேவேளை, பட்ஜெட்டில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. குறிப்பாக, பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகள் ஆளும் பீகார், ஆந்திராவுக்கு பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது, பட்ஜெட்டில் பாரபட்சம் காட்டப்படுவதாகவும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை என்றும் கூறி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டனர். பின்னர், பட்ஜெட்டில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாக கூறி காங்கிரஸ், திமுக உள்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.  

Tags:    

மேலும் செய்திகள்