ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து கோரிக்கை; அமித்ஷாவுடன் உமர் அப்துல்லா சந்திப்பு

ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கும் கோரிக்கை தொடர்பாக அமித்ஷாவை உமர் அப்துல்லா சந்தித்து பேசினார்.

Update: 2024-12-19 13:04 GMT

காஷ்மீர்,

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு ரத்து செய்தது. இதனை தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் முதல் முறையாக கடந்த செப்டம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் தேசிய மாநாடு கட்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து, அக்கட்சியின் துணை தலைவர் உமர் அப்துல்லா, ஜம்மு-காஷ்மீரின் முதல்-மந்திரியாக பதவியேற்றார்.

ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம் என்று அவர் கூறியிருந்தார். இந்த நிலையில், டெல்லியில் இன்று மத்திய மந்திரி அமித்ஷாவை உமர் அப்துல்லா நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, ஜம்மு-காஷ்மீரிக்கு மாநில அந்தஸ்து வழங்கும் கோரிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த கோரிக்கையை நிறைவேற்றுவதற்கான கால அவகாசம் குறித்து மத்திய மந்திரியிடம் உமர் அப்துல்லா பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்